பாகிஸ்தான் விமானம் எப்16 இந்தியாவின் வான் எல்லையில் பறந்ததால், அதனை தாக்க பின்தொடர்ந்து துரத்தி இந்திய மிக் 21 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தினர். பின்னர் திரும்பும் வழியில் இந்திய விமானத்தை பாகிஸ்தான் தாக்கியதால், அதில் இருந்த பயணி அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.
ஒருபுறம் அவரை விடுவிக்கக்கோரி பிரதம மந்திரி அலுவலகத்தில் ஒரு அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவல், உளவுத்துறை அதிகாரிகள், ராணுவ தலைமை அதிகாரி மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்துக்கொண்டு அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தானுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்று ஆலோனையும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை குறித்தும் பேசி வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தான் எந்தவித விதிகளையும் மதிக்காமல மீண்டும் இந்திய வான்வெளியில் பாகிஸ்தானிய விமானம் மீண்டும் ஊடுருவ முயன்றதால் பரபரபப்பு ஏற்ப்பட்டுள்ளது. விமானப்படையின் அறிக்கையின் படி இன்று பாகிஸ்தானிய ஜெட் விமானங்கள் ஜம்மு மாநிலத்தில் கிருஷ்ணா பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள பூஞ்ச் என்ற இடத்தில் ஊடுருவ முயற்ச்சி செய்தது. ஆனால் இந்திய விமானப்படை அவர்களை விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னால் தான் கிருஷ்ணா பள்ளத்தாக்கில் எல்லைக்கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இச்சம்பவம் இன்று பிற்பகலில் நடந்தது. தற்போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அவரை விடுவிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.