நாடு முழுவதும் நாளை மறுநாள் (அக்டோபர் 13-ம்) தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல்களின் விலைகளை தினமும் நிர்ணயிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, தினசரி விலை மாற்றி அமைக்கபடுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளன. இதனால் பாதிப்படைந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதனையடுத்து, தினசரி விலை நிர்ணயிக்கப்படுவதை திரும்பப் பெற வேண்டும் என்றும், கமிஷன் உயரத்த வேண்டும் என்றும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 13ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கை மத்திய அரசு பரிசீலனை செய்வதாக உறுதிமொழியை அளித்துள்ளதால், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.