சாத்தியகூறுகளுடன் கூடிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஆகியவையே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது...
"சாத்தியகூறுகள் கொண்ட கொள்கை, திட்டமிடல் மற்றும் செயல் திறன் ஆகியவையே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். திட்டமிட்டிறாத கட்டமைப்பின் சுவர்களை அகற்றுவதன் மூலம் அரசு வரம்புகளை குறைத்து வரவு செலவு திட்டத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது." என குறிப்பிட்டுள்ளார்.
Our budget is not limited to outlay, focus of our budget is not limited to output, focus of our budget is on outcome: PM Modi at the Global Investors' Summit-Magnetic Maharashtra: Convergence 2018 in Mumbai pic.twitter.com/HTSynSfLT5
— ANI (@ANI) February 18, 2018
மேலும் இந்தாண்டு பட்ஜெட்டில் அனைவருக்கும் எரிபொருள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவை கிடைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மொத்த முதலீடுகளில் 51% மகாராஷ்டிராவுக்கு கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவின் வளர்ச்சி என்பது சிந்தனை மற்றும் நாட்டின் நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கான எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.