இந்திய விமானப்படை அதிரடி: பாதுகாப்பு குறித்து PM அவசர ஆலோசனை!

இந்திய விமானப்படை அதிரடி!- பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்!!

Last Updated : Feb 26, 2019, 11:31 AM IST
இந்திய விமானப்படை அதிரடி: பாதுகாப்பு குறித்து PM அவசர ஆலோசனை! title=

இந்திய விமானப்படை அதிரடி!- பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்!!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், உடனடி பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு, இந்திய விமானப்படை அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். 

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதால், அந்நாட்டின் விமானப்படையும், இந்தியாவிற்கு புகுந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் உள்ள, இந்திய வான் தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு, இந்திய விமானப்படை அறிவுறுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் விமானப்படை எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், காஷ்மீர், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களை ஒட்டி அமைந்திருக்கும் எல்லைப்பகுதியிலும், இவற்றின் அண்டை மாநில பகுதிகளிலும், இந்திய பாதுகாப்புப்படைகளின் வான் தடுப்பு அமைப்புகளை, தயார் நிலையில் வைக்குமாறு, இந்திய விமானப்படை சுட்டிக்காட்டியிருக்கிறது. 

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, தனது இல்லத்தில், பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி உறுப்பினர்களுடன், இன்று காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், பிரதமரின் அவசர ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

 

Trending News