பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்சை GIFT சிட்டியில் (குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி) வெள்ளிக்கிழமை, ஜூலை 29, 2022 அன்று பல திட்டங்களுடன் தொடங்குகிறார். தங்க வணிகம் அல்லது தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் இந்த பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். வரும் நாட்களில் இந்த பரிவர்த்தனை இந்தியாவின் தங்க சந்தையை முற்றிலும் மாற்றப் போகிறது. இதில் தங்க பரிமாற்றம் எப்படி செய்யப்படும், அது யாருடைய கட்டுபாட்டின் கீழ் இருக்கும் போன்ற பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முதல் உலகளாவிய தங்க வர்த்தக மையத்தின் சிறப்பு அம்சங்கள்:
1. இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் என்பது இந்தியாவின் முதல் சர்வதேச தங்க வர்த்தக மையம் ஆகும், இது காந்திநகரில் உள்ள GIFT நகரில் நிறுவப்பட்டுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், துபாய், லண்டன் மற்றும் நியூயார்க்கில் மற்ற உலகளாவிய பிற தங்க சந்தையை காட்டிலும், சலுகை விலையில் பலதரப்பட்ட தங்கத்தினால் ஆன தயாரிப்புகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப சேவைகளை வழங்கும்.
2. இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் IFSC லிமிடெட் (IIBX) CDSL, India INX, NSDL, NSE மற்றும் MCX ஐந்து சந்தை நிறுவன முதலீட்டாளர்களால் ஊக்குவிக்கப்படுகிறது .
3. இந்த சந்தை இந்தியாவில் தங்க நிதியை ஊக்குவிக்கும், மேலும் தரமான உத்தரவாதத்துடன் நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கும் என்று IFSC அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு; இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
4. குளோபல் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் என்பது பிராந்திய அளவில் தங்க வர்த்தக மையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அதிக நகைக்கடைக்காரர்கள், தங்க இறக்குமதியை மேற்கொள்ளலாம். ஐஐபிஎக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் கவுதம் இது குறித்து கூறுகையில், இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் டீலர்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளை இது பெரிய அளவி ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
5. தங்க பரிமாற்றம் செய்யும் நகைக்கடைக்காரர்கள் தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்ய இது அனுமதிக்கும். தற்போதுள்ள விதிகளில், சில வங்கிகள் மற்றும் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.
6. பொருட்கள் நகரத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படாத வரை தங்க வர்த்தகங்களுக்கு உள்ளூர் கடமைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும் படிக்க | Gold and Silver Trade: கண்காணிப்பு பட்டியலில் தங்கம் வெள்ளியின் வெளிநாட்டு வர்த்தகம்
7. 995 தூய்மை கொண்ட 1 கிலோ தங்கம் மற்றும் 999 தூய்மை கொண்ட 100 கிராம் தங்கம் IBX தளத்தில் ஆரம்பத்தில் T plus 0 தீர்வுடன் (100 சதவிகிதம் முன்பணம்) வர்த்தகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க நிலையில், தங்க முதலீட்டு ரசீதுகள் மூலம் வர்த்தகம் செய்யப்படும். IIBX-ல் வர்த்தகம் அமெரிக்க டாலர்களில் இருக்கும்.
8. பரிமாற்றத்தில் வால்ட் சேவை வழங்கும் நிறுவனங்களும் அடங்கும். சர்வதேச நிதிச் சேவை மையத்தில் உள்ள அனைத்து பெட்டகங்களும் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
9. OECD வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் தகுதிவாய்ந்த நகைக்கடைக்காரர்கள், வெளிநாட்டு பொன் சப்ளையர்கள் தவிர, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், NRI களும் IIBX இன் உறுப்பினர்களாக ஆவதற்கு தகுதியுடையவர்கள்.
10. சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம் IIBX-ன் கட்டுப்பாட்டாளர். 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் IIBX ஐ நிறுவுவதாக அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க | Hallmarked Jewellery: ஜூன் 1ம் தேதி முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ