புதுடெல்லி: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த ஒரு புத்தகம் வெளியிடு விழாவில் நாட்டிற்கு சேவை செய்த முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று "சந்திரசேகர: கருத்தியல் அரசியலின் கடைசி சின்னம்" என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த புத்தகத்தை மாநிலங்களவை துணைத்தலைவர் ஸ்ரீ ஹரிவன்ஷ் மற்றும் ஸ்ரீ ரவிதத் பாஜ்பாய் எழுதியுள்ளனர். பாராளுமன்ற நூலக கட்டிடத்தின் பாலயோகி ஆடிட்டோரியத்தில் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்த புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியது, சந்திரசேகர் ஜி இறந்து 12 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் அவரின் எண்ணங்கள் நமது எண்ணத்தில் இன்னும் இருக்கிறது. அவருடன் வேலை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. முதன் முதலில் தில்லி விமான நிலையத்தில் அவரை சந்தித்ததாக கூறினார். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருந்தபோதிலும் அனைத்து தலைவர்களிடம் சந்திரசேகர் ஜி நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தார் என்று பிரதமர் தெரிவித்தார்.
இன்று எந்த ஒரு தலைவரும் 10-12 கி.மீ. தூரம் பிரச்சாரம் செய்தால், அடுத்த நாள் அவர்கள் வீட்டில் முடங்கி விடுவார்கள். ஆனால் சந்திரசேகர் ஜி அப்படி இல்லை. அவர் நாடு, மக்கள் என 24 மணி நேரமும் பணியில் இருப்பார் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூடினார்.
ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஜியை "குரு ஜி" என்று தான் அழைப்பார் ஸ்ரீ சந்திர சேகர் ஜி எனவும் பிரதமர் நினைவு கூர்ந்தார். சந்திரசேகர் ஜி கலாச்சாரம் மற்றும் சிறந்த கொள்கைகளை உடையவர். மோகன் தரியா மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற அரசியல் தலைவர்களை பிரதமர் சந்திர சேகர் ஜி பற்றி அதிகம் பேசுவார்கள்.
ஆனால் முன்னால் பிரதமர் சந்திரசேகரர் ஜி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அளவுக்கு, அங்கீராம் மற்றும் பெருமை கிடைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் பிரகாசிக்கும் ஒரு காலத்தில் , ஒரு நபர் காங்கிரஸிலிருந்து கிளர்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு பெரிய விசியம்.
முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பணியின் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் தேவை. அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் ஒரு அருங்காட்சியகம் டெல்லியில் நிறுவப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.