நூற்றாண்டுகால சட்டங்களை கொண்டு புதிய இந்தியாவை படைக்க முடியாது: பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2020, 08:00 PM IST
  • உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
  • 5 ஆண்டுகளில் நிறைவடையும் இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.8,379.62 கோடியாகும்.
  • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 60 லட்சம் என்ற அளவில் அதிகரிக்கக்கூடும்.
நூற்றாண்டுகால சட்டங்களை கொண்டு புதிய இந்தியாவை படைக்க முடியாது: பிரதமர் மோடி title=

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழிப்பாதைகளைக் கொண்டது. 29.4 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம் தாஜ்மஹால், ஆக்ரோ கோட்டை, சிக்கந்தரா ரயில் நிலையம், பேருந்துநிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்படும்.

5 ஆண்டுகளில் நிறைவடையும் இந்த ஆக்ரா (Agra)  மெட்ரோ ரயில் திட்டத்தின் மதிப்பு ரூ.8,379.62 கோடியாகும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 26 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 60 லட்சம்  என்ற அளவில் அதிகரிக்கக்கூடும்.

அப்போது அவர் உரையாற்றிய போது, ஆக்ரா மெட்ரோ பெட்டிகள், மேக் இன் இந்தியா திட்டத்தில்  தயாரிக்கப்பட்டு, மெட்ரோ நெட்வொர்க், தற்சார்பு இந்தியாவிற்கான (Aathmanirbhar Bharat) ஒரு எடுத்து காட்டாக இருக்கும் என்றார்.

சீர்த்திருத்தங்கள் மூலமே வளர்ச்சி சாத்தியப்படும் என்றும், நூற்றாண்டுகால பழைய சட்டங்கள் மூலம் புதிய இந்தியாவை கட்டமைக்க முடியாது என்றார். நூற்றாண்டு கால சட்டங்கள் இன்றைய காலத்திற்கு பொருத்தமாக இல்லாமல் இருக்கும் நிலையில், அந்த சட்டங்கள் சுமையாகிவிட்டன என்று கூறினார்.
 
செவ்வாய்கிழமை பாரத் பந்த் (Bharat Bandh) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பற்றி நேரிடையாக குறிப்பிட்டு பேசாமல், பிரதமர் மோடி சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கடந்த நூற்றாண்டில், அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கப்ப்பட்ட அந்த பழைய சட்டங்கள் அப்போது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால், வரும் நூற்றாண்டில் இந்த சட்டங்கள் சுமையாக மாறிவிடும். அதனால் தான், சூழ்நிலைக்கு ஏற்ப தொடர்ந்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கூறினார்.

முந்தைய காலத்தில், சீர்திருத்தங்கள் சில துறைகளுக்காக, அந்த துறைகளில் நிலையை கவனத்தில் கொண்டு சிறிய அளவில் செய்யப்பட்டன. ஆனால், இன்று முழுமையாக அனைவரைரின் நலனையும் மனதில் வைத்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

ALSO READ | Dec 8 பாரத் பந்த்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் என்ன

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News