நாளை சர்வதேச யோகா தினத்தில், பிரதமர் மோடி சிறப்புரை

யோகக்கலை என்பது நம் நாட்டின் பாரம்பரியக் கலை. யோகா உடல் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, மனதுக்கும்  நலம் தரும் வாழ்வியல் கலை. உடல்ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் யோகா மிகவும் நன்மை பயக்கிறது.

Last Updated : Jun 20, 2021, 06:48 PM IST
  • வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அந்தந்த நாடுகளில் சர்வதேச யோக தினத்திற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.
  • உலக அளவில் சுமார் 190 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை சர்வதேச யோகா தினத்தில், பிரதமர் மோடி சிறப்புரை

யோகக்கலை என்பது நம் நாட்டின் பாரம்பரியக் கலை. யோகா (Yoga)  உடல் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, மனதுக்கும்  நலம் தரும் வாழ்வியல் கலை. உடல்ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் யோகா மிகவும் நன்மை பயக்கிறது.

அப்படிப்பட்ட உன்னதமான யோக கலையை உலக நாடுகளுக்கு எடுத்து செல்லும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஐநா சபை, கடந்த 2014-ம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை 7 வது சர்வதேச யோகா தினம் (International Yoga Day), உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடத்தின் யோகா தினத்தின் முக்கிய கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா' என்பதாகும். 

தில்லியில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள், காலை 6:30 மணி முதல் துார்தர்ஷன் சேனல்களில் நேரிடையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சிறப்புரையாற்ற உள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் உரை நிகழ்த்த உள்ளார். 

Also Read | International Yoga Day 2021: நாளை சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

அதன்பின்னர் யோகா பயிற்சி செய்யும் விளக்கம் நடைபெறும்.  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், உள்ளிட்ட  பல ஆன்மீக தலைவர்கள் மற்றும் யோகா குருக்கள், ஆரோக்கிய வாழ்விற்கான யோகா குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். 

மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அந்தந்த நாடுகளில் சர்வதேச யோக தினத்திற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. உலக அளவில் சுமார் 190 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | Power of Yoga: மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News