வடநாட்டின் புண்ணிய தலமான கேதார்நாத்தில் ஆதிசங்கரருக்கு 12 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில் புனரமைக்கப்பட்ட ஆதி சங்கராச்சாரியாரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். மேலும் கேதார்நாத்தில் ₹130 கோடி மதிப்பிலான மறு மேம்பாட்டுத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 2013ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த ஆதிசங்கராச்சாரியாரின் 12 அடி சிலை புனரமைக்கப்பட்டது.
இன்று ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்த வைத்த பிரதமர் மோடி, “ இந்த நிகழ்விற்கு நீங்கள் அனைவரும் சாட்சி. ஆதி சங்கரரின் பக்தர்கள் எண்ணங்கள் இங்கே நிறைந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மடங்களும், ஜோதிர்லிங்கங்களும் இன்று நம்முடன் எண்ணத்தில் இணைந்துள்ளனர் என கூறினார்.
You all are witness to the inauguration of Adi Shankaracharya Samadhi here today. His devotees are present here in spirit. All maths and 'jyotirlingas' in the country are connected with us today: PM Modi at Kedarnath, Uttarakhand pic.twitter.com/0lXVUvn56b
— ANI (@ANI) November 5, 2021
இந்த நிகழ்வின் போது, பிரதமருடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ( Pushkar Singh Dhami) மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
ALSO READ | COP26 Summit: பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க உரையின் முக்கிய அம்சங்கள்
நிகழ்வின் "பிரதமரின் தலைமையில், கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. ரிஷிகேஷ் மற்றும் கரண்பிரயாக் இடையே ரயில்வே திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன," என்று முதல்வர் கூறினார். "சார் தாம் யாத்திரை பாதையில், அனைத்து வானிலைக்கு உகந்த சாலை அமைக்கும் பணியும் அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது" என்றும் அவர் மேலும் கூறினார்.
ALSO READ | அமெரிக்காவில் தீபாவளி: வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றினார் அதிபர் ஜோ பைடன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR