புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை ஈ-மாநாடு மூலம் விளக்கினார் பிரதமர்

புதிய கல்விக் கொள்கையால் கல்வியில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பிரதமர் மோடி விளக்கினார். புதிய கல்விக் கொள்கை இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2020, 02:37 PM IST
  • தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மக்கள் அனைவரும் நேரடியாக ஈடுபட்டுள்ளார்கள் – பிரதமர்.
  • மாறிவரும் காலங்களுடன் ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாக்கப்படுகிறது – பிரதமர்.
  • 34 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை ஈ-மாநாடு மூலம் விளக்கினார் பிரதமர்  title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள் புதிய கல்விக் கொள்கை (New Education Policy) தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈ-மாநாட்டில் உரையாற்றி,  ​​புதிய கல்விக் கொள்கையின் நன்மைகளை விவரித்தார். புதிய கல்விக் கொள்கையால் கல்வியில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பிரதமர் மோடி விளக்கினார். புதிய கல்விக் கொள்கை இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

புதிய கல்விக் கொள்கைப் பற்றிய பிரதமரின் உரை:

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான இந்த மாநாடு மிகவும் முக்கியமானது. இன்று, தேசிய கல்விக் கொள்கை குறித்த விரிவான தகவல்கள் இங்கே கிடைக்கும். அனைவருக்கும் தெளிவான தகவல்கள் கிடைத்தால், இந்த தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது எளிதாக இருக்கும். 3-4 ஆண்டுகள் விரிவான பல கலந்துரையாடல்கள் மற்றும் லட்சக்கணக்கான பரிந்துரைகள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்து, பின்னர், இந்த கல்விக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் வருகைக்குப் பின்னர், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும், இதில் எந்த விதமான பாரபட்சமும் காட்டப்பட்டுள்ளதாக எந்த குறிப்பும் கேள்வியும் எழவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். இவ்வளவு பெரிய மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா என்ற ககேள்வி பலரது மனதில் வரலாம். இப்போது அனைவரின் கவனமும் அதை செயல்படுத்துவதை நோக்கி உள்ளன.

இன்று இது நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர், தேசிய கல்விக் கொள்கையை மதிப்பாய்வு செய்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான விவாதம். இது நாட்டின் கல்வி முறைக்கு மிகவும் பயனளிக்கிறது.

ALSO READ | உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக இருக்கும்: PM Modi

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் நீங்கள் அனைவரும் நேரடியாக ஈடுபட்டுள்ளீர்கள். இதில் அதிகமானோர் ஈடுபட்டால், இதன் வலிமையும் அவ்வளவு பலமாக இருக்கும்.

ஒவ்வொரு நாடும் அதன் கல்வி முறைமையில் அதன் தேசிய விழுமியங்களைச் சேர்த்து, அதன் தேசிய இலக்குகளுக்கு ஏற்ப முன்னேறுகிறது. நாட்டின் கல்வி முறை அதன் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை தயார் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையும் கூட.

தேசிய கல்விக் கொள்கை 21 ஆம் நூற்றாண்டின் 'புதிய இந்தியா'வின் அடித்தளத்தை தயாரிக்கப் போகிறது. பல ஆண்டுகளாக நம் கல்வியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இதன் விளைவாக, நம் சமூகத்தில் ஆர்வம் மற்றும் கற்பனையின் மதிப்புகளை ஊக்குவிப்பதற்கு பதிலாக, செம்மறி இயக்கம் ஊக்குவிக்கப்பட்டது.

நம் கல்வி, கல்வி தத்துவம், கல்வியின் நோக்கம் ஆகியவற்றில் ஆர்வம் இல்லாத வரை நமது மாணவர்களும் இளைஞர்களும் எவ்வாறு விமர்சன மற்றும் புதுமையான திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.

இன்று ரவீந்திரநாத் தாக்கூரின் நினைவு நாளாகும். 'மிக உயர்ந்த கல்வி என்பது நமக்கு விஷயங்களைத் தெரிவிப்பது மட்டுமல்ல, நம் வாழ்வை எல்லா இருப்புக்கும் இசைவாகக் கொண்டு செல்வதுமாகும்.' என்று அவர் கூறினார். நிச்சயமாக தேசிய கல்விக் கொள்கையின் பெரிய குறிக்கோள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: அப்போ உங்க குழந்தைகள் மட்டும் 3 மொழி பள்ளியில் சேர்க்கலாமா? - H.ராஜா

இன்று, இந்தியாவின் தேசிய கல்வி கொள்கையை உருவாக்கும் போது, ​​இந்த அம்சங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டன என்பதில் நான் திருப்தி அடைகிறேன். மாறிவரும் காலங்களுடன் ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாக்கப்படுகிறது. ஒரு புதிய உலகளாவிய தரமும் அமைக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவின் கல்வி முறை தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இதைச் செய்வதும் மிக முக்கியமானது.

பள்ளி பாடத்திட்டத்தின் 10 + 2 கட்டமைப்பைத் தாண்டி, இப்போது 5 + 3 + 3 + 4 பாடத்திட்டத்தின் கட்டமைப்பைக் கொடுப்பது இந்த திசையில் ஒரு படியாகும். வேர் முதல் உலகம் வரை, மனிதன் முதல் மனிதநேயம் வரை, கடந்த காலத்திலிருந்து நவீனத்துவம் வரை, இந்த தேசிய கல்விக் கொள்கையின் தன்மை அனைத்து புள்ளிகளையும் இணைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.”

34 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் இன்று ஒரு ஈ-மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

ALSO READ: New Education Policy 2020: PMK இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Trending News