வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை!

வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Last Updated : Dec 25, 2019, 11:43 AM IST
வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை!

வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு  மரியாதை செலுத்தப்படுகிறது.

More Stories

Trending News