புதுடெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுக்கூட்ட பேரணியில் உரையாற்ற உள்ளார். இந்த பொது கூட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தேசிய தலைநகரில் 1734 காலனிகளை பதிவு முறைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க பா.ஜ.க இன்று காலை 11 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. நன்றி மோடி பேரணியில், நடைபெற உள்ள 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார்.
டெல்லியில் சட்டவிரோத காலனிகளை ஒழுங்குபடுத்துவது மூலம் சுமார் 40 லட்சம் மக்களுக்கு உரிமையைப் பெறுவதற்கான வழிவகையை செய்துள்ளது. பிரதமர் மோடியின் பேரணியைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை விடுமுறைக்குப் பிறகும், டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் பாதுகாப்பு பணிகளை குறித்து ஆய்வு செய்வதில் மும்முரமாக இருந்தார்.
चलो रामलीला मैदान... (रविवार, 22 दिसम्बर 2019, सुबह 11 बजे) 1731 अनधिकृत कॉलोनियों में रहने वाले 40 लाख लोगों को मिला मालिकाना हक... हृदय से धन्यवाद मोदी जी#ThankYouModiji pic.twitter.com/4Ut4QbTqON
— BJP Delhi (@BJP4Delhi) December 21, 2019
பொது கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, ராம்லீலா மைதானத்தை ஒட்டிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களை கடுமையான சோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஒ'வ்வொருவரும் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு எஸ்பிஜி (SPG) வசம் உள்ளதால், சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.