கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி ட்வீட்.. "பீதி அடைய வேண்டாம்"

கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய தேவையில்லை என ஊக்கம் அளித்த பிரதமர் மோடி. "அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்" கோடிட்டுக் காட்டும் ஒரு புகைப்படத்தையும் ட்வீட் செய்துள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Mar 3, 2020, 03:36 PM IST
கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி ட்வீட்.. "பீதி அடைய வேண்டாம்"
Photo: PTI

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று (செவ்வாய்க்கிழமை), பீதி அடையத் தேவையில்லை என்றும், மக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார். நாட்டில் ஒரு நாளில் இரண்டு பேருக்கு கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவுவதை கையாள்வதற்கான ஆயத்த நிலை குறித்து பல அமைச்சர்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுடன் ஒரு "விரிவான ஆய்வு" நடத்தியதாகவும் பிரதமர் கூறினார்.

கொரோனா வைரஸ் பீதியால் பள்ளிகள் மூடல்; அனைத்து தேர்வுகளும் ரத்து!

“மக்கள் பீதி அடையத் தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்காப்பை உறுதிப்படுத்த முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய "அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்" கோடிட்டுக் காட்டும் ஒரு புகைப்படத்தையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

 

இதற்கு முன்பு கேரளாவில் மூன்று பேருக்கு முன்னர் இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டு மருத்துவமனைகளில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

கோழிக்கறியால் கொரோனா வைரஸ் பரவுவுகிறதா..? படிக்கவும்

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது