காஷ்மீர், தலித் விவகாரம் குறித்து பிரதமர் பார்லி.,யில் வந்து பேசட்டும் :காங்.,

-

Updated: Aug 10, 2016, 12:39 PM IST
காஷ்மீர், தலித் விவகாரம் குறித்து பிரதமர் பார்லி.,யில் வந்து பேசட்டும் :காங்.,
Zee Media Bureau

காஷ்மீரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் பதற்ற நிலை குறித்த ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது காஷ்மீர் விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.பி., குலாம் நபி ஆசாத் பேசுகையில்:-

காஷ்மீர் பிரச்னை பற்றி பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் போய் பேசுகிறார். அவர் இங்கு வந்து பேசட்டும்.பார்லிமெண்டில் தெலுங்கானா பிரச்னை குறித்து தான் பேசுகிறார். ராஜ்யசபாவில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பது 4-வது முறை. காஷ்மீர் விவகாரம் குறித்தும், தலித்கள் மீதான தாக்குதல் குறித்தும் பிரதமர் அவர்கள் பார்லிமெண்டில் வந்து பதிலளிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

காஷ்மீரை நேசிக்க வேண்டாம். காஷ்மீர் மக்களை நேசியுங்கள். காஷ்மீரில் மிகவும் உணர்வு ரீதியிலான பிரச்னை நிலவுகிறது. அந்த விவகாரத்தையும் பதற்றத்தையும் தணிக்க நாம் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டியது அவசியம். வகுப்புவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று அனுமதிக்கு பரிந்துரை செய்த உள்துறை அமைச்சருக்கு எனது நன்றி என தெரிவித்தார்.