PSLV 47 ஏவுகலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் தெரிவிப்பதாக பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "பி.எஸ்.எல்.வி-சி 47 ஏவுகலன் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்! மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள்!!" என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ((ISRO) புதன்கிழமை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கார்டோசாட்-3 (Cartosat-3) சுமந்து PSLV-C47 என்ற துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை ஏவியது.
பி.எஸ்.எல்.வி-சி 47 ஏவுகலன் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்! மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள்!!
— Dr S RAMADOSS (@drramadoss) November 27, 2019
குறித்த செயற்கைக்கோள் ஏவுதல் நிகழ்வு காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக நடைப்பெற்றது.
ISRO தகவல்படி, PSLV-C47 ஆனது கார்டோசாட்-3 (Cartosat-3) மற்றும் அமெரிக்காவின் 13 வணிக நானோசாடெலைட்டுகளை சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் ஏவியது. கார்டோசாட்-3 (Cartosat-3) செயற்கைக்கோள் மூன்றாம் தலைமுறை சுறுசுறுப்பான மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும், இது உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் திறனைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் 97.5 டிகிரி சாய்வில் 509 கி.மீ சுற்றுப்பாதையில் வைக்கப்படும். விண்வெளித் திணைக்களமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) உடன் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக PSLV-C47 அமெரிக்காவின் 13 வணிக நானோசாடெலைட்டுகளையும் கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கார்டோசாட்-3 (Cartosat-3) சுமந்து சென்ற PSLV-C47 ஏவுகலத்தை வெற்றிகரமாக ஏவிய ISRO விஞ்ஞானிகளுக்கு, பாமக தலைவர் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.