அரசியல் கட்சிகள் நிதிபெறுவதில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க சில புதிய நடைமுறையை அமல் படுத்தப்பட உள்ளது.
ஒருவரிடம் ரூ. 2000 மட்டும் ரொக்கமாக பெற முடியும். இதற்கு முன் 20,000 ரூபாய் வரை ரொக்கமாக பெற அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சிகள் செக் மூலமோ அல்லது மின்னனு முறையிலோ நன்கொடை நிதியை பெற்றுக்கொள்ளலாம். செக் மூலமோ அல்லது மின்னனு முறையிலோ நன்கொடை நிதியை பெறுபவர்களுக்கு கட்டுப்பாடில்லை.
அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.