எல்லையில் எச்சரிக்கை: உளவுத் தகவலுக்கு பிறகு உஷார் நிலையில் பாதுகாப்பு வீரர்கள்!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதிகளில் ஒரு பெரிய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கத்துடன் சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என உளவுத்துறை தகவல் கிடைத்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 04:54 PM IST
  • இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.
  • BAT பிரிவில்,பல்வேறு பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-ஏ-மொஹம்மத், லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற பல அமப்புகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
  • BAT பிரிவு சிவிலியன்களையும் தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் எச்சரிக்கை: உளவுத் தகவலுக்கு பிறகு உஷார் நிலையில் பாதுகாப்பு வீரர்கள்!! title=

ஜம்மு காஷ்மீரில் (Jammu Kashmir) உள்ள எல்லைப் பகுதிகளில் ஒரு பெரிய பயங்கரவாத நடவடிக்கையை (Terrorist attack) மேற்கொள்ளும் நோக்கத்துடன் சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என உளவுத்துறை தகவல் (Intel Inputs) கிடைத்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.

BAT (Border Action Team) நடவடிக்கையை மேற்கொள்ள, இந்தியாவிற்குள் (India) ஊடுருவும் நோக்கத்துடன் பிம்பேர் கலி மற்றும் நௌஷேரா பகுதிகளில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெறப்பட்ட உளவுத் தகவல்கள், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவத்துடன் பகிரப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு வீரர்களுக்கு கூறப்பட்டுள்ளதாகவும்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் (Pakistan) ராணுவத்தின் BAT பிரிவு, பயங்கரவாதிகளை ஒரு பயங்கரவாத நடவடிக்கைக்காக தயார் செய்து வருவதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. எல்லையின் இந்திய தரப்பில் பயங்கரவாதிகளின் நடமாட்டமும் உணரப்படுகின்றது.

பாகிஸ்தானின் BAT பிரிவில்,பல்வேறு பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-ஏ-மொஹம்மத்(JeM), லஷ்கர்-ஏ-தொய்பா (LeT) போன்ற பல அமைப்புகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். BAT பிரிவு சிவிலியன்களையும் தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் இந்தப் பிரிவு மொஹம்மத் அஸ்லாம் என்ற சிவிலியனை கொன்று அவரது தலையை தனியாக அறுத்து, உடலை பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி (LoC) அருகில் வீசியது.

ALSO READ: சீனாவுடனான CPEC திட்டம் வெற்றிகரமாக நிறைவடையும்: இம்ரான் உறுதி

சில நாட்களாக இப்படிப்பட்ட தகவல்கள் எதுவும் வராமலிருந்தன. ஆனால் சில மணி நேரம் முன்னர் கிடைத்துள்ள தகவலுக்குப் பிறகு படைகள் முழு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, இந்த காலகட்டத்தில், பல்வேறு முகாம்களில் பயிற்சி அளித்து, BAT, இந்தியாவில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகளை தயார் செய்கிறது என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.

கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட உளவுத் தகவலின் பேரில் எடுத்த நடவடிக்கையில், ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில், பிம்பேர் கலி செக்டரின் கேரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

இன்று காலை, வடக்கு காஷ்மீரில் உள்ள நௌகாம் செக்டரில், இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 

ALSO READ: PM Modi இன் உத்தரவின் பேரில் NSA Ajit Doval சீனாவுக்கு அனுப்பிய செய்தி இதுவே....

Trending News