லிப் கிஸ்-ன் போது கணவரின் நாக்கை கடித்து துப்பிய கர்ப்பிணி மனைவி..!

ஆசையாக கணவன் முத்தம் கொடுத்த போது... கணவரின் நாக்கை துண்டாக கடித்து துப்பிய கர்ப்பிணி மனைவி..! 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 24, 2018, 03:12 PM IST
லிப் கிஸ்-ன் போது கணவரின் நாக்கை கடித்து துப்பிய கர்ப்பிணி மனைவி..!
Representational Image

ஆசையாக கணவன் முத்தம் கொடுத்த போது... கணவரின் நாக்கை துண்டாக கடித்து துப்பிய கர்ப்பிணி மனைவி..! 

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங் என்பவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது...! 

இதையடுத்து, கரண்சிங் மனைவி காஜல் எட்டு மாதா கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில், நேற்று அவருக்கும் அவரது கணவர் கரண்சிங்குக்கும் கலை நிகழ்ச்சி தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கரண்சிங்கின் பெற்றோர் தலையிட்டு அவர்களது சண்டையை தீர்த்து வைத்தனர். இரவு மீண்டும் வாக்குவாதம் தொடங்கியது. 

சண்டையின் போது கரண்சிங் மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காஜல், ‘‘இந்த நாக்கு தானே பேசு கிறது’’ என்று சொல்லியபடி அவர் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார்.

நாக்கு பாதி துண்டான நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட கரண்சிங் அலறியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவத்தை கண்ட அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் ஜப்தர்சங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டாக்டர்கள் நீண்ட நேரம் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். துண்டான நாக்கை ஒட்ட வைக்க முயற்சி நடந்தது. ஆனால் நாக்கை ஒட்டவைக்க முடியவில்லை. இதனால் கரண்சிங்கால் மீண்டும் பேச முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்தனர். பிறகு கர்ப்பிணி பெண்ணான காஜலை கைது செய்து IPC-326 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.