மகளிர் தினத்தை முன்னிட்டு "ஜுன்ஜுனு" செல்கிறார் பிரதமர்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் நாளை ராஜாஸ்தான் மாநிலம் "ஜுன்ஜுனு" செல்கின்றார்!

Updated: Mar 7, 2018, 09:00 PM IST
மகளிர் தினத்தை முன்னிட்டு "ஜுன்ஜுனு" செல்கிறார் பிரதமர்!
File Photo

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் நாளை ராஜாஸ்தான் மாநிலம் "ஜுன்ஜுனு" செல்கின்றார்!

பெண் குழந்தைகளின் கல்வியை காப்பாற்றும் நோக்கில், அரசாங்கத்தின் முன்முயற்சியை முன்வைக்க பிரதமர் அவர்கள், 'பேட்டி பச்சாவு பேட்டி படாவு' திட்டத்தினை இந்தியாவில் உள்ள 161 மாவட்டங்களில் இருந்து 640 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளார். 

இந்நிகழ்ச்சியில் பெண் கல்வி குறித்தும், பெண் முன்னேற்றம் குறித்தும், பெண் குழந்தைகளின் தாய்மார்களிடம் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றுகின்றார். மேலும் இத்திட்டத்தின் கீழ் சிறந்து விளங்கும் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் சான்றிதழினையும் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக, தேசிய ஊட்டச்சத்து மிஷன் (NNM) ஆனது இந்த ஜுன்ஜுனு-வில் இருந்து பிரதமர் மோடி அவர்களால் துவங்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் நோக்கம் ஆனது, ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையினை குறைப்பது முதலியவற்றிர்கான முயற்சிகளை மேற்கொள்வது ஆகும்.