200 அடி ஆழ்குழாய் கிணறில் விழுந்த 16 வயது சிறுவன் 16 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு!!
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் போர்வெல் எனப்படும் ஆழ்குழாய் கிணறில் விழுந்த 6 வயது சிறுவன், 16 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். தேசிய பேரிடர் மீட்புக் குழு அச்சிறுவனை வெற்றிகரமாக மீட்டது.
புனே மாவட்டம், அம்பேகான் தாலுகா பகுதியில் உள்ள தொராண்டாலே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரது மகன் ரவி பண்டிட் பில். அச்சிறுவன் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது, மூடப்படாமல் இருந்த 200 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணறில் தவறி விழுந்தான். சிறுவனை காணவில்லை என தேடி அலைந்த பெற்றோருக்கு, அவன் ஆழ்குழாய் கிணறில் விழுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வந்தடைந்தது.
Maharashtra: The six-year-old boy who fell into a borewell near Manchar tehsil in Pune yesterday has been safely rescued after about 16 hrs of rescue operation. pic.twitter.com/o1O1Cenxsh
— ANI (@ANI) February 21, 2019