புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாஜக எம்.பி. பிரக்யா தாகூரை பயங்கரவாதி என்று அழைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுக்குறித்து பிரக்யா தாக்கூர் மக்களவை சபாநாயகருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, மக்களவை சபாநாயகர் இந்த பிரச்சினையை சிறப்பரிமை குழுவுக்கு (Privilege Committee ) அனுப்பலாம் எனத் தெரிகிறது. ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறியதாக புகார் சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பப்படும். இந்த புகாரை குழு விசாரித்து அடுத்து என்ன செய்யலாம் என முடிவு செய்யும். தேவைப்பட்டால் ராகுல் காந்தியை அழைக்கலாம்.
ராகுல் காந்தி தனது ட்வீட்டில், "பயங்கரவாத பிரக்யா பயங்கரவாத கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று வர்ணித்தார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சோகமான நாள்" என்று கூறியிருந்தார். இது மக்களவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய. கோட்சே குறித்து தனது கருத்துக்கு மக்களவையில் மன்னிப்பு கேட்கும் போது பிரக்யா தாக்கூர், ராகுல் காந்தி குறித்து புகார் அளித்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் மற்றும் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த பிரச்சினைக்கு ராகுல் இன்னும் பதிலளிக்கவில்லை. இதனால் தான் பிரக்யாவின் புகாரை சிறப்பரிமை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகாத்மா காந்தியை கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே குறித்து கூறிய கருத்துக்கு பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் வெள்ளிக்கிழமை மக்களவையில் மன்னிப்பு கேட்டார். தனது அறிக்கையால் எனது கருத்து யாராவது காயமடை செய்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று பிரக்யா கூறினார். அதே நேரத்தில், தனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தினார். மகாத்மா காந்தி நாட்டிற்கு செய்த சேவையை மதிக்கிறேன் என்று கூறினார்.