அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்..!

பிரதமர் மோடி குறித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று சூரத் கோர்ட்டில் ஆஜராகிறார் ராகுல்!!

Last Updated : Oct 10, 2019, 07:41 AM IST
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்..! title=

பிரதமர் மோடி குறித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று சூரத் கோர்ட்டில் ஆஜராகிறார் ராகுல்!!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது 'அனைத்து திருடர்களும் ஏன் மோடி குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்கிறார்கள்' என்று கூறி அவதூறு வழக்குத் தொடுத்தது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.

'மோடி குடும்பப்பெயர்' கருத்து தொடர்பாக கிரிமினல் அவதூறு வழக்கில் தன்னை தற்காத்துக் கொள்ள ராகுல் சூரத்தில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

ராகுல் மீது உள்ளூர் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி என்பவர் ஐபிசி பிரிவு 499 மற்றும் 500 ன் கீழ் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்தார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது; நாட்டின் காவலாளி என தன்னை கூறி வருகிறார் மோடி, ஆனால் 'அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று எப்படி உள்ளது' என்றார். ராகுல் பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், ராகுல் மீது குஜராத் ஆமதாபாத் கோர்ட்டில் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கு விசாரணைக்காக, ராகுல் கோர்ட்டில் ஆஜராகிறார். இத்தகவல்களை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார். 

 

Trending News