புதுடெல்லி: இந்திய ரயில்வே அனைத்து ரயில்களில் ஆர்எசி-க்கு இட ஒதுக்கீடு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது, ஆர்ஏசி என்று குறிப்பிட்டிருந்தால் பயணம் செய்வது உறுதியாகி விட்டது என்று அர்த்தம். ஆனால் படுக்கை வசதியில்லாமல், இருக்கையில் அமர்ந்து கொண்டே செல்ல வேண்டியிருக்கும். முன்பதிவின் போது டிக்கெட் கிடைத்தவர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டால், அந்த இருக்கை மற்றவருக்கு கிடைக்கும்.
தற்போது ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஆர்ஏசி ஒதுக்கீடு எண்ணிக்கை 5 ஆக உள்ள நிலையில் அது 7 ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 14 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கைகள் கிடைக்கும். 3 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் 2 ஆர்ஏசி ஒதுக்கீடு உள்ள நிலையில், அது 4 ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 8 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கை வசதி கிடைக்கும்.
மேலும் 2 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஆர்ஏசி ஒதுக்கீடு 2 ஆக உள்ள நிலையில், அது 3 ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 6 பேருக்கு இருக்கை வசதி உறுதியாகும் என்று ரெயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த வசதி வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.