டெல்லியில் மீண்டும் வானிலை மாறும்.. 11 முதல் 13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது

ஒன்று அல்லது இரண்டு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். மார்ச் 20 க்கு பிறகு தான் வடமாநிலங்களில் கோடைகாலம் ஆரம்பமாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 10, 2020, 04:06 AM IST
டெல்லியில் மீண்டும் வானிலை மாறும்.. 11 முதல் 13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது title=

புது டெல்லி: இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி மற்றும் தண்ணீரை ஊற்றி அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தேசியத் தலைநகரம் டெல்லியில் வானிலை (Weather) எப்படி இருக்கும் என்று பார்ப்போம். காலையில் லேசாக சற்று குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் பிற்பகலில் வலுவான சூரிய ஒளி இருக்கும். அதேநேரத்தில் மாலையில் மீண்டும் மேகமூட்டமும் இடியும் ஏற்படலாம். மார்ச் 10 முதல் 13 வரை டெல்லி என்.சி.ஆர் (Delhi NCR) உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளில் லேசான மழை (Rain) பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழைக்குப் பிறகு, நேற்று (திங்கள்கிழமை) வெப்பம் (Heat) சற்று அதிகமாக இருந்தது. மக்கள் காலையில் குளிரை உணர்ந்தார்கள். நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. 

மேலும் படிக்க: உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்! இதை படிக்கவும்!

வானிலை (Weather) ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, திங்களன்று அதிகபட்ச வெப்பநிலை (Temperature) 25.2 டிகிரி இருந்தது. இது இயல்பை விட 3 டிகிரி குறைவானதாகும். குறைந்தபட்ச வெப்பநிலையும் 12.4 டிகிரியில் இருந்தது. 

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி வரை இருக்கும். அதேபோல நாளை (மார்ச் 11) பலத்த காற்று வீசும். அவற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. டெல்லி முழுவதும் மார்ச் 13 வரை பல பகுதிகளில் மழை தூறல் போட்டுக் கொண்டு இருக்கும். மார்ச் நடுப்பகுதி வரை வெப்பநிலை உயராது. இந்த வாரம் வெப்பநிலை 25 முதல் 27 டிகிரி வரை இருக்கும்.

மேலும் படிக்க: Watch Video டாய்லெட் பேப்பருக்காக குடுமி சண்டை போட்ட பெண்கள்..!

டெல்லி-என்.சி.ஆர் (Delhi NCR) உட்பட வட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் மார்ச் 11 இரவு நல்ல மழை பெய்யக்கூடும். ஒன்று அல்லது இரண்டு இடங்களில் ஆலங்கட்டி மழை (Rain) பெய்யக்கூடும். இந்த மழை மார்ச் 12 வரை தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாக குறையும். மார்ச் 20 க்கு பிறகு தான் வெப்பம் (Heat) அதிகரித்து கோடைகாலம் ஆரம்பமாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Trending News