பாரத்பூர்: ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில், ஒரு பெண் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இந்த ஐந்து மாதங்களில் அவருக்கு 31 முறை COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரத்பூரில் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான ஆர்.பி.எம் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து குழப்பமடைந்துள்ளனர்.
அந்தப் பெண் வாழும் அப்னா கர் ஆசிரமத்தின் நிர்வாகம், இப்போது அவரைப் பற்றிய விவரங்களை ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு அனுப்ப முற்படுகிறது. ஆசிரமத்தின் நிறுவனர் டாக்டர் பி.எம்.பர்த்வாஜ், பஜேரா கிராமத்திலிருந்து சாரதா என்ற பெண் ஆசிரமத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார்.
சாரதாவின் முதல் COVID-19 பரிசோதனை ஆகஸ்ட் 28, 2020 அன்று நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் பின்னர், சாரதா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் நோயாளியின் மன மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு, டாக்டர்கள் ஒரு உதவியாளரை அவளுடன் தங்க அனுமதித்தனர். பின்னர், அவர் ஆசிரமத்தின் தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு மாற்றப்பட்டார்.
சாரதா இதுவரை மொத்தம் 31 முறை பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பரத்வாஜ் மேலும் தெரிவித்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு COVID-19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், அந்த பெண்ணுக்கு ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் அலோபதி மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மருத்துவர்களே (Doctors) அதிசயிக்கும் விதத்தில் அந்த பெண் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். எந்த பலவீனத்திற்கான அறிகுறிகளையும் அவர் காட்டவில்லை.
ALSO READ: COVID-19 Museum: கொல்கத்தாவில் கூடிய விரைவில் வருகிறது கொரோனா அருங்காட்சியகம்
அவருக்கு தொடர்ந்து செய்யப்பட்ட அனைத்து சோதனைகளிலும் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மற்றவர்கள் அவருடன் தொடர்பு கொள்ளாதபடி இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட (Quarantine) அறைகளில் அவர் தங்க வைக்கப்பட்டதாக பரத்வாஜ் கூறினார். அவரது அறிக்கை கோவிட் நெகடிவாக வந்த பின்னரே அவர் மற்றவர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவார் எனவும் மருத்துவர் கூறினார்.
தற்போது, பரத்பூர் மாவட்டத்தின் எந்த மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. ஆனால் சாரதாவின் விஷயம் அதிகாரிகளை இறுக்கத்தில் வைத்துள்ளது. சாதாரண சந்தர்ப்பங்களில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி சுமார் 10 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகிறார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நோயாளி முழுமையாக குணமடைந்தபின் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்.
ஆனால் சாரதாவின் வினோத உடல்நிலையால் ஆசிரம நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. 5 மாதங்களாக ஒருவருக்கு 31 முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இறுக்கத்தை தரக்கூடிய விஷயம்தான்.
ALSO READ: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களுடன் PM Modi உரை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR