எதிர்கட்சியில் மோடியை போன்ற தலைவர்கள் யாரும் இல்லை - ராஜ்நாத் சிங்!

பிரதமர் மோடி போல் எதிர்கட்சியில் திறமையான தலைவர்கள் இல்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2018, 01:15 PM IST
எதிர்கட்சியில் மோடியை போன்ற தலைவர்கள் யாரும் இல்லை - ராஜ்நாத் சிங்! title=

பிரதமர் மோடி போல் எதிர்கட்சியில் திறமையான தலைவர்கள் இல்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!

பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் நேற்று தொடங்கியது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக நேற்றைய தினம் உரையாற்றிய பாஜக தலைவர் அமித்ஷா அவர்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போது இருப்பதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் கூட்டத்தில் உரையாற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவிக்கையில்... "பிரதமர் மோடியை போன்ற திறமையான தலைவர்கள் எதிர் கட்சியில் இல்லை. காங்கிரஸ் போன்ற கட்சிகள் மோடியின் சிறப்பு திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

2014-ஆம் ஆண்டிற்கு பின்னர் 15 மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 20 மாநிலங்களில் கோட்டையை பிடித்துள்ளது. அதே வேலையில் எதிர்கட்சியாக காங்கிரஸ் 10 மாநிலங்களில் தங்களது ஆட்சியை இழந்துள்ளது. மக்களின் இந்த முடிவே அவர்களின் மனதில் யார் உள்ளனர் என்பதினை தெரிவித்துள்ளது". என குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மோடியில் 'Vision 2022' திட்டம் குறித்து புகழாரம் சூட்டிய ராஜ்நாத் சிங் அவர்கள், விரைவிலேயே பயங்கரவாதம், வகுப்புவாதம் போன்ற விஷயங்களை முற்றிலுமாக ஒதுக்கிய நாடாக இந்தியா மாறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உயர்வை கண்டுவரும் பெட்ரோல், டீசல் விலைவாசியினை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாளை பாரத் பந்த் கடைபிடிக்கப்படவுள்ள நிலையில் தற்போது காங்கிரஸை தாக்கி ராஜ்நாத் சிங் அவர்கள் தனது உரையினை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது!

Trending News