2019-ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள பாஜக-வின் சிறப்பு குழுக்கள்...

எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான 20 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் குழுவிற்கு தலைவராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயல்படுவார் என பாஜக தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்!

Last Updated : Jan 6, 2019, 07:38 PM IST
2019-ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள பாஜக-வின் சிறப்பு குழுக்கள்... title=

எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான 20 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் குழுவிற்கு தலைவராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயல்படுவார் என பாஜக தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்!

அதேவேலையில் கொள்கை பரப்பு குழுவிற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பணியாற்றுவார் எனவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு தேர்தலை கைப்பற்ற 17 சிறப்பு குழுக்களை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இக்குழுக்களுக்கு பாஜக தலைவர்கள் தனிதனியே தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுவர் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் தீர்மானக்குழு மற்றும் கொள்கை பரப்பு குழுவிற்கு முறையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி செயல்படுவார்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதேப்போல் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ரவி ஷங்கர் பிரசாத், பியுஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் இந்த குழுக்களின் மற்ற பிரிவுகளை நிர்வகிப்பர் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் தன்னார்வ அமைப்புக்களுக்கு அலைந்து வரும் குழுவிற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தலைமை தாங்குவார் எனவும், அதே நேரத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழு தேர்தல் பிரசுரங்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஊடகக் குழுவிற்கு பிரசாத் தலைமை வகிப்பார், அதே நேரத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் பொதுகூட்டங்களை ஏற்பாடு செய்யும் பிரிவிற்கு தலைமை தாங்குவார்.

2019-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைக்க பாஜக பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த சிறப்பு குழுக்களை ஏற்பாடு செய்துள்ளது.

Trending News