Rameshwaram Cafe Blast Case Latest News Updates: பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. குண்டுவெடிப்பில் ராமேஸ்வரம் கபே முற்றிலும் சிதிலமடைந்தது. இருப்பினும் 8 நாள்களில் புதுப்பிக்கப்பட்டு தற்போது மீண்டும் இயங்கி வருகிறது.
40 நாள்களுக்கும் மேலான நிலையில், இன்றுதான் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரின் இரண்டு நபர்களை தேசிய விசாரணை முகமை (NIA) மேற்கு வங்கத்தில் மடக்கிப்பிடித்துள்ளது. முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப் மற்றும் அப்துல் மத்தீன் தாஹா ஆகிய இருவரை மேற்கு வங்கு வங்கத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் கந்தி அல்லது கொண்டாய் என்ற சிறிய கிராமத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள், உள்ளூர் போலீசார் உதவியுடன் கைது செய்தனர். இந்த கிராமம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 180 கி.மீ., தொலைவில் உள்ளது.
பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு
கைதான முஸ்ஸாவிர் மற்றும் தாஹா ஆகிய இருவரும் கர்நாடகாவில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் அவரது x பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் தாக்கியிருந்தார்.
மேலும் படிக்க | அப்போது வடநாட்டில்... இப்போது வயநாட்டில் - வேலையை தொடங்கும் பாஜக... என்ன சர்ச்சை?
அவர் அந்த பதிவில்,"ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப் மற்றும் அப்துல் மத்தீன் தாஹா ஆகியோரை கொல்கத்தாவில் என்ஐஏ பிடித்துள்ளது. இருவரும் கர்நாடகாவின் சிவமோகாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
துரதிருஷ்டவசமாக, மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கம் தீவிரவாதிகளின் பாதுகாப்பான சொர்க்கமாக மாறிவிட்டது" என பதிவிட்டிருந்தார். இது அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி உடனடி அட்டாக்
மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹாட்டா என்ற நகரில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கு பரப்புரை மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவின் இந்த கூற்று, வெற்று உளறல் என சாடி உள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,"கைது செய்யப்பட்ட இருவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் இங்கே தலைமறைவாக இருந்துள்ளனர். அவர்கள் இரண்டு மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தில் அமைதி நிலவினாலே பாஜகவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உத்தர பிரதேசம் பாதுகாப்பாக இருக்கிறதா?, ராஜஸ்தாந் பாதுகாப்பாக இருக்கிறதா?, பீகார் பாதுகாப்பாக இருக்கிறதா?" என கூட்டத்தை நோக்கி கேள்வியெழுப்பி, பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் மீது கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
'பாஜக பரப்பும் வதந்தி'
பாஜகவின் குற்றச்சாட்டுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குனால் கோஷூம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், உள்ளூர் போலீசார் இந்த நடவடிக்கையை எத்தகையை வழியில் உதவினார்கள் என்பதை என்ஐஏ ஒப்புகொள்ள வேண்டும். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த கைதுக்கு மாநில போலீசாரின் ஒத்துழைப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்" என்றார்.
The proactive role of WBP in the matter has been officially acknowledged by the Central Agencies.
West Bengal has NEVER been a safe haven for terrorists and the state police will continue to remain ever-vigilant in keeping its people safe from nefarious activities. (2/2)
— West Bengal Police (@WBPolice) April 12, 2024
பாஜகவின் அமித் மால்வியா தெரிவித்த கருத்துக்கு மேற்கு வங்க போலீசாரும் அவர்களின் அதிகாரப்பூர்வ X தளத்தின் மூலம் பதிலளித்துள்ளனர். அதில்,"வதந்தி மிக மோசமான நிலையில் உள்ளது. அமித் மால்வியா தெரிவித்த செய்த கூற்றுகள் முற்றிலும் முரணானது.
பாதுகாப்பான புகலிடம் இல்லை
உண்மை என்னவென்றால், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மேற்கு வங்க காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையில் பூர்பா மேதினிபூரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மேற்கு வங்க போலீசாரின் பங்கை என்ஐஏ அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
மேற்கு வங்கம் ஒருபோதும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்ததில்லை. மேலும் அதன் மக்களை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதில் மாநில காவல்துறை தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் இந்த வழக்கில், கர்நாடகாவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவரை பிடித்து என்ஐஏ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.. கவிதாவை காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ