தெற்கு ரயில்வே வண்டிகளின் நேரத்தில் திடீர் மாற்றம்!

இணை தொடர்வண்டிகளின் காலநேர தாமதத்தால் தெற்கு ரயில்வே தொடர்வண்டிகளின் நேரம் மாற்றி அமைக்கப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Last Updated : Jun 18, 2018, 03:17 PM IST
தெற்கு ரயில்வே வண்டிகளின் நேரத்தில் திடீர் மாற்றம்!

இணை தொடர்வண்டிகளின் காலநேர தாமதத்தால் தெற்கு ரயில்வே தொடர்வண்டிகளின் நேரம் மாற்றி அமைக்கப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி...

கோயம்பத்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் தொடர்வண்டி (வண்டி எண்: 02197)  முன்னதாக 18.06.2018 அன்று 19.05 மணியளவில் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 18.06.2018 அன்று 20.35 மணியளவில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சுவெள்ளி - பெங்களூரு செல்லும் தொடர்வண்டி (வண்டி எண்: 16316)  முன்னதாக 18.06.2018 அன்று 16.45 மணியளவில் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 18.06.2018 அன்று 18.45 மணியளவில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவணந்தப்புரம் - எர்னாக்குளம் செல்லும் தொடர்வண்டி (வண்டி எண்: 16304)  முன்னதாக 18.06.2018 அன்று 17.45 மணியளவில் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 18.06.2018 அன்று 19.00 மணியளவில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More Stories

Trending News