பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையானது சுமார் 300km தொலைவிற்கு மூடப்பட்டுள்ளது!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 300 கி.மீ. நீளத்திற்கு ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ராம்சோ தெஹ்ஸில் உள்ள டிக்டோல் பெல்ட் பகுதியில் அதிக அளவு மழை பெய்ததால் மலைசார்ந்த சாலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 300km தொலைவிற்கு போக்குவரத்து சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலச்சரிவுகளை அகற்றுவதற்காக எல்லை சாலை படையினர் தீவிரமாக முடக்கப்பட்டுள்ளனர். துப்புறவு இயந்திரங்களுடன் களத்தில் இரங்கியுள்ள சாலை படையினர் நிலைமையினை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.