வருமான வரித்துறை செய்த சோதனையில் வெளிநாட்டு வங்கியில் இந்தியர்கள் ரூ.,19000 கோடி கறுப்பு பணம் பதுக்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது,'' என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.
நேற்று லோக்சபாவில் கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி:-
சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி., வங்கி உட்பட வெளிநாட்டு வங்கி கணக்குகளில், 700 இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதில் மொத்தம் ரூ.,19000 கோடி கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதை வருமான வரித்துறை கண்டு பிடித்து உள்ளனர்.
இதுதொடர்பாக 72 புகார்கள் பெறப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அமலாக்க துறை விசாரணை அமைப்புகளும் உதவுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.