ஹைதராபாத்தில் ரூ.66 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல்

ஹைதராபாத்தில் வருமான வரித்துறை நடவடிக்கையில் ரூ.66 லட்சம் மதிப்பளவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Last Updated : Dec 18, 2016, 12:23 PM IST
ஹைதராபாத்தில் ரூ.66 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வருமான வரித்துறை நடவடிக்கையில் ரூ.66 லட்சம் மதிப்பளவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

டிசம்பர் 16-ம் தேதி ஹைதராபாத்தின் ஹிமயத்நகரின் தெலுங்க அகடாமி பகுதியில் வருமான வரித்துறை அதிகாரியை சிலர் குடியிருப்பு பகுதிக்குள் ஓடினர். அப்போது சிலரிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. 

இரண்டாவது சம்பவமானது நேற்று டேங்க் பண்ட் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வருமான வரித்துறையினர், போலீஸ் அதிகாரிகளுடம் மறித்தனர். அப்போது இருவரிடம் ரூ. 30 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பை அடுத்து கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்நடவடிக்கைகள் நடந்து உள்ளது. 

More Stories

Trending News