ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லி விமான நிலையத்தில் வரவேற்றார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2018, 08:58 PM IST
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு title=

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்தித்தனர்.

 

 

 

 


இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19_வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு இன்று வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டார். 

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், ரஷியாவின் அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வாங்கும் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இன்று இரவு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை, கச்சா எண்ணெய் விலை உயர்வு என சர்வதேச பிரச்சினைகள் பற்றி யும், இரு நாடு உறவுகள் பற்றியும் விவாதிக்கக் கூடும்.

पुतिन के दौरे से पहले भारत ने रूस-पाक सैन्य अभ्'€à¤¯à¤¾à¤¸ पर जताई आपत्ति

ஆனால் அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக்கூடாது. மீறி ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News