இந்தி நடிகர் சல்மான் கான் நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த வாரம் பேட்டி அளித்தார். அதில், சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக கூறிய சல்மான் கான், 6 மணிநேரம் 120 கிலோ எடையை தூக்க வேண்டி இருக்கிறது. மல்யுத்த சண்டை காட்சியிலும் நடிக்க வேண்டி உள்ளது. இதனால் களைப்பாக இருக்கிறேன். தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் நிலைமையில் இருக்கிறேன்’’ என தெரிவித்து இருந்தார்.
சல்மானின் கான் இந்த பேச்சு பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும், சல்மான் கான் தனது கருத்துக்கு 7 நாட்களில் மன்னிப்பு கோர வேண்டும் எண்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், சல்மான் கான் தனது வழக்கறிஞர் மூலமாக தேசிய பெண்கள் ஆணையத்திற்கு பதிலளித்துள்ளார். சல்மான் கான் பதில் குறித்து மகளிர் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. சல்மான் கான் பதில் தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக மகளிர் ஆணையம் பதிலளிக்கும் என தெரிகிறது. சல்மான் கான் பதில் மட்டுமே அளித்துள்ளதாகவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.