காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசு-க்கு HC உத்தரவு!!

நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

Last Updated : Feb 22, 2019, 12:02 PM IST
காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசு-க்கு HC உத்தரவு!! title=

நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்கள், சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க கோரி பொது நல மனு ஒன்றை தாரிக் அதீப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். அந்த மனுவில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். அதைத் தடுக்க வேண்டும், மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டன. அவர்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்று கூறப்பட்டது.

பின்னர், ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க என்னென்னெ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Trending News