சண்டை எதுக்கு? சமாதனமா போங்கப்பா! டெல்லி அரசுக்கும் ஆளுநருக்கும் சமரசம் செய்யும் SC ​

SC Advice to Delhi LG And CM: 'சண்டையை விட்டு விட்டு ஒற்றுமையாக செயல்படுங்கள்... DERC தலைவரை ஒன்றாக தேர்ந்தெடுங்கள்' என டெல்லி அரசுக்கும் எல்ஜிக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 17, 2023, 06:52 PM IST
  • அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் துணைநிலை ஆளுநர்
  • டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
  • இரு தரப்பும் சண்டையை மறந்து சமாதானமாக நீதிபதிகள் அறிவுறுத்தல்
சண்டை எதுக்கு? சமாதனமா போங்கப்பா! டெல்லி அரசுக்கும் ஆளுநருக்கும் சமரசம் செய்யும் SC ​ title=

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் ஒன்றாக விசாரித்தது. இந்த விசாரணையின் போது CGI என்ன சொன்னது என்று பார்ப்போம். டெல்லி அரசுக்கும் டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கும் இடையிலான மோதல் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது.

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் நியமனம் தொடர்பாகவும், டெல்லியில் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான மத்திய அரசின் அரசாணைக்கு எதிராகவும் டெல்லி அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.  

அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் இரண்டு மனுக்களை இன்று (2023, ஜூலை 17 திங்கள்கிழமை) விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (Delhi Electricity Regulatory Commission) தலைவர் நியமனம் தொடர்பாக அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

வழக்குகளின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற சட்ட அமர்வு, டி.இ.ஆர்.சி., வழக்கை விசாரித்த போது, ​​டில்லி முதல்வரும், டெல்லி துணைநிலை ஆளுநரும் அமர்ந்து சரியான பெயரை பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இருவரும் அரசியலமைப்பு பதவிகளில் உள்ளனர். இவர்கள் இருவரும், சண்டைகளை தவிர்த்து மக்களின் நலனை கவனிக்க வேண்டும் என்றும், இருவரும் ஒன்றாக அமர்ந்து DERC தலைவர் பெயரை முடிவு செய்து நீதிமன்ற அமர்விடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க | அரசு அதிகாரிகளுக்கு பயங்கரவாத தொடர்பு... பணி நீக்கம் செய்த அரசு !

இடமாற்றம் குறித்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் 

இது தவிர, டெல்லியில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது தொடர்பான மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப உள்ளோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

அதன்பிறகு மத்திய அரசு, ஆணையை இப்படி திருத்தலாமா வேண்டாமா என்பதை அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்த விசாரணை வியாழக்கிழமை நடைபெறும்.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான அரசாணையுடன் இந்த விவகாரமும் தொடர்புடையது. இந்த அரசாணை மூலம் GNCTD சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சட்டத்தின் 45-டி பிரிவின் கீழ், புதிய DERC தலைவரை LG நியமித்துள்ளது.

ஜூலை 20ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புதிய அவசரச் சட்டம், மசோதா வடிவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

மேலும் படிக்க |  Income Tax Return: வருமான வரி ரிட்டர்ன்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்கள்!

சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை காத்திருப்பது நல்லது என்று மேத்தா அறிவுறுத்தினார். அதன்பிறகுதான் 45-டி பிரிவு அதன் அசல் வடிவில் இருக்குமா அல்லது மாற்றப்படுமா என்பது தெரியவரும்.

நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வருவது அரசின் உரிமை, ஆனால் டிஇஆர்சி தலைவர் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. எனவே, டெல்லி துணைநிலை ஆளுநரும், முதல்வரும் ஒன்றாக அமர்ந்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று இதுகுறித்து தலைமை நீதிபதி தெரிவித்தார்.

DERC தலைவர் நியமனம்

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (DERC) புதிய தலைவராக நீதிபதி உமேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா முடிவு செய்த பெயரை டெல்லி அரசு ஏற்கவில்லை. இந்த நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜூலை 4-ம் தேதி இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ​​உமேஷ் குமாரின் பதவிப் பிரமாணம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் படிக்க |  ஊழியர்களுக்கு நற்செய்தி! ஓய்வு பெரும் வயது 2 ஆண்டுகள் அதிகரிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News