கொரோனா பாதிப்பால் கேரளா பள்ளிகளில் மதிய உணவு நிறுத்தம்!

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 09:41 PM IST
கொரோனா பாதிப்பால் கேரளா பள்ளிகளில் மதிய உணவு நிறுத்தம்! title=

திருவனந்தபுரம் :  கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக எந்தவொரு நாட்டிலும் கட்டுக்குள் வரவில்லை. சில நாடுகள் மட்டுமே தீவிர ஊரடங்கு மற்றும் சிறப்பான தடுப்பூசி பணிகள் ஆகியவை மூலம் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் தான் பதிவானது. ஆனால், அம்மாநில அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு விரைவாகக் கட்டுக்குள் வந்தது.  அதேபோல 2-ம் அலை சமயத்திலும் கூட, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், கேரளா அரசின் சிறப்பான திட்டமிடல் காரணமாக அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை.

keral

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.  எனினும், வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.  இந்த நிலையில், பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது.அதற்கு பதிலாக, அதற்குரிய தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

keral

கேரளாவில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.   இதன்படி, பள்ளிகளுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் மதிய உணவு சாப்பிட அனுமதி இல்லை எனவும், ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டுமே அமர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால், அவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ASLO READ கொரோனா மரணங்களுக்கு ஒன்றிய அரசே இழப்பீடு வழங்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News