மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியிடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மற்றும் அவரது மகள் ஷர்மிஸ்தா கருத்து கூறினர். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பாஜக பொய்யான செய்திகளை பரப்பும் அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிக்கிறீர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், பிரணாப் முகர்ஜி கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும். மதரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்திருந்தது.
இந்நிலையில், பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா சொன்னதை உறுதிபடுத்தும் விதமாக, ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் போல, பிரணாப் முகர்ஜியும் சல்யூட் அடிக்கும் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளி யாகியுள்ளன.
இது குறித்து பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்..! ’நான் பயந்தது நடந்துவிட்டது. அதனால்தான் எச்சரித்தேன். நான் சொல்லி சில மணி நேரங்கள் கடந்த நிலையில், பாஜவும் ஆர்.எஸ்.எஸும் தங்களது மோசமான தந்திரத்தை ஆரம்பித்துவிட்டன’ என்று கூறியுள்ளார். அதோடு அந்த மார்பிங் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
See, this is exactly what I was fearing & warned my father about. Not even few hours have passed, but BJP/RSS dirty tricks dept is at work in full swing! https://t.co/dII3nBSxb6
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) June 7, 2018