விஜயவாடாவில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

விஜயவாடாவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 7 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர்.

Last Updated : Feb 28, 2017, 10:24 AM IST
விஜயவாடாவில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி  title=

விஜயவாடா: விஜயவாடாவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 7 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ஹைதராபாத் சென்ற சொகுசு பேருந்து விஜயவாடா அருகே பாலத்தின் மீது சென்றபோது, அதிகாலை 5.30 மணியளவில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் நந்திகாம அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது விபத்து தொடர்பாக விஜயவாடா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News