மும்பை மற்றும் கோவா இடையேயான தேஜஸ் ஏ.சி. ரெயில் சேவை திங்கள் அன்று தொடங்கியது.
உலகத்தரத்திற்கு ஈடாக தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரெயிலில் பயோ-வேக்கம் கழிவறைகள், இன்டிகேட்டர்கள், தானியங்கி கதவுகள், அதிநவீன ஏர் பிரேக், கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு பயணிக்கும் ஜி.பி.எஸ். வசதி கொண்ட தொடு திரை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
திங்கள் அன்று மும்பையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய தேஜஸ் மறுநாள் கோவா சென்றது. பயணிகள் சென்றது, ரெயிலை சோதனை செய்த ரெயில்வே அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரெயிலில் உள்ள ஹெட்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது, மேலும் ஸ்கிரீன்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருந்தது. எங்கு பார்த்தாலும் குப்பையாக காட்சி அளித்து உள்ளது. இது அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
ரயிலை சேதப்படுத்த வேண்டாம் என ரெயில்வே அதிகாரிகள் கோரிக்கை வித்து உள்ளனர்.