மறைந்த காங்., மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தின் உடல் காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது; இறுதி சடங்கில் கலந்து கொள்ள அமித் ஷா, சோனியா காந்தி வருகை!!
Delhi: Mortal remains of former Delhi Chief Minister Sheila Dikshit being taken from her residence in Nizamuddin to Congress Headquarters. pic.twitter.com/T80zxxH3eh
— ANI (@ANI) July 21, 2019
பாஜகவைச் சேர்ந்த சுஸ்மா சுவராஜ் மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் நிஷாமுதீன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்!!
டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் 81 வயதில் காலமானார். மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவரான தீட்சித், உடல் நலக் குறைவு காரணமாக, டெல்லியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று மதியம் 2:30 மணி அளவில் இயற்கை எய்தினார். ஷீலா தீட்சித்தின் இறப்பு குறித்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலா தீட்சித்திற்கு காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடல் நிலை கவலைக்கிடமானது. இதை அடுத்து டெல்லியிலுள்ள போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மாலை 3.55 மணியளவில் ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
நிஜாமுதினிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலாதீட்சித் உடலுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Former External Affairs Minister Sushma Swaraj pays tribute to former Delhi CM and Senior Congress leader #SheilaDixit who passed away yesterday pic.twitter.com/Ta5dPRDxft
— ANI (@ANI) July 21, 2019
ஞாயிறு பிற்பகல் 2.30 மணிக்கு நிஜாம் போத் காட்டில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் அரசியல் சார்பற்ற குடும்பத்தில் 1938 ஆம் ஆண்டு ஷீலாதீட்சித் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் கன்னஜ் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு நெருக்கமானவராக இருந்த அவர், மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை டெல்லி முதலமைச்சராக பதவி வகித்தார். டெல்லியில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்த பெருமையும் அவரையே சேரும். 2013 - 2014 ஆம் ஆண்டுகளில் கேரளாவின் ஆளுநராகவும் பணியாற்றினார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஷீலாதீட்சித் டெல்லி பாஜக தலைவர் மனோஜ்திவாரியிடம் தோல்வி அடைந்தார். மெட்ரோ ரயில் இயக்கம், வாகனங்கள் வெளியிடும் மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் டெல்லிக்கு நவீன தோற்றத்தை கொடுத்தவர் என்ற பெருமை ஷீலா தீட்சித்திற்கு உண்டு.