காங்கிரஸ் எதுவும் செய்யாது.. பாஜக மட்டுமே வளர்ச்சியை தரமுடியும்: ஷிவ்ராஜ் சிங்

ராகுல் காந்தி மக்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால் உங்களுடன் இருக்கும் என்னால் மட்டுமே வளர்ச்சியை கொடுக்கமுடியும் என ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2018, 06:22 PM IST
காங்கிரஸ் எதுவும் செய்யாது.. பாஜக மட்டுமே வளர்ச்சியை தரமுடியும்: ஷிவ்ராஜ் சிங் title=

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், அம்மாநில முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசி, பிரச்சாரம் மேற்க்கொண்டார். 

மத்தியப்பிரதேச மாநில சத்னாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங், "நவம்பர் 28 ஆம் தேதி மாநிலத்தில் தேர்தல் முடிந்ததும், ராகுல்காந்தி இங்கு இருக்க மாட்டார். அவர் வெளிநாடு சென்று விடுவார். ராகுல் காந்தி நாட்டில் அதிகம் விருப்பத்தை விட வெளிநாட்டில் தான் அதிகம் இருப்பார். ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டவர். அவரால் உங்களுக்கு உதவிகளை செய்ய முடியாது. உங்களுக்கான வளர்ச்சி மற்றும் திட்டங்கள் மாமா(சிவராஜ் சிங்)வால் மட்டுமே செய்ய முடியும். என்னால் மட்டுமே உங்களுக்கு உதவிகளை செய்ய முடியும்" எனக் கூறினார்.

230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் நவம்பர் 28, 2018-ஆம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் ஐந்தே நாட்கள் உள்ள நிலையில் தேசிய கட்சி மற்றும் மாநில கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரை ஆட்சி அமைப்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலையில், இம்முறை ஆட்சியை கைப்பற்றும் முயற்ச்சியில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News