Shocking Report: சராசரியாக தினமும் இத்தனை வன்புணர்வு

கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2021, 09:58 AM IST
Shocking Report: சராசரியாக தினமும் இத்தனை வன்புணர்வு title=

கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் ஆகும். 

திகிலூட்டும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு பெண்களுக்கு (Sexual Harrasment) எதிராக மொத்தம் 3,71,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டை (4,05,236) விட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் கற்பழிப்பு சம்பவங்கள் மட்டுமே 27,046 ஆகும். இதனையடுத்து, நாளொன்றுக்கு சராசரியாக 77 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. 

ALSO READ | பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கடலூர் தந்தை கைது!

மாநிலங்களின் விவரம்:
* மாநிலங்களை பொறுத்தவரை ராஜஸ்தானில் அதிகபட்சமாக 5,310 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகியது.
* உத்தரபிரதேசத்தில் 2,769 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவானது.
*  மத்திய பிரதேசத்தில் 2,339 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவானது.
* மராட்டியத்தில் 2,061 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவானது.
* அசாமில் 1,657 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவானது.

கற்பழிப்பு சம்பவங்களை தவிர கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வகையில் 1,11,549 வழக்குகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தரவுகள் ஒருபுறமிருக்க, பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் நம்மை கலங்கடிக்கச் செய்கின்றன.

நாடு முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்கள் பல நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் நம் மனதை பதபதைக்க வைக்கும் விதத்தில் உள்ளன. கடுமையான பல சட்டங்கள் ஒரு புறம் வந்து கொண்டிருந்தாலும், இவற்றில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை எதுவும் மாறவில்லை. என்ன சட்டம் வந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், நான் நினைத்தை செய்வேன் என்ற வீராப்புடன் மனசாட்சியை விற்று விட்டு வீதி வீதியாய் அலையும் நபர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கு யார் காரணம்? வீட்டுச் சூழலா, சமூக சீர்கேடா, தனி மனித ஒழுக்கம் என்பது மறைந்து விட்டதா? நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?

இத்தனை கேள்விகளுக்கும் பதிலை நம்மால் தேட முடியுமா? அப்படி தேடி நாம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடாதா கேள்விகளே மிஞ்சுகின்றன……

ALSO READ | மபி-யில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட அவலம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News