புதுடெல்லி: 14 முறை கருக்கலைப்பு. தற்கொலை செய்துக்கொண்ட 33 வயதுடைய பெண். இந்த சம்பவம் தலைநகர் டெல்லியை உலுக்கி உள்ளது. அந்த பெண்ணுக்கு குறைந்தது சுமார் 14 முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக மிக மன உளைச்சலுக்கு ஆளாகி, அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரமான சம்பவம் ஜூலை 5 ஆம் தேதி தென்கிழக்கு டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் அரங்கேறியதாக காவல்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை 5 அன்று ஜெய்த்பூரில் உள்ள ஒரு வீட்டிற்குள் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். அவர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர் (தென்கிழக்கு) ஈஷா பாண்டே கூறுகையில், தற்கொலை செய்துக்கொண்ட பெண்ணிடம் இருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அந்த தற்கொலைக் கடிதத்தில் கௌதம் குமார் சிங் என்ற நபருடன் 8 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், அவருடன் உடல் ரீதியிலான உறவில் ஈடுபட்டதாகவும், தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டு சென்று விட்டார் என்றும், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று காவலர் பாண்டே கூறினார்.
மேலும் படிக்க: குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்
ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் தலைமறைவாக உள்ளார். மேலும் தற்கொலை செய்துக்கொண்ட பெண்ணின் கைபேசி கைப்பற்றப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
அந்த கடிதத்தில் அந்த பெண் 14 முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதை குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: Delhi Crime: சிகரெட் வாங்க 10 ரூபாய் தராததால் கத்தியால் குத்தி கொலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ