வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என மக்களுக்கு ராகுல் காந்தி விளக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், இரண்டாவதாக வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவதை உறுதி செய்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி போன்ற வேட்பாளர்களை நிறுத்துவது என்பது காங்கிரஸ் கேரளாவில் இடதுசாரிகளை இலக்காக வைத்து போட்டியிடுகிறது என்பது உறுதி செய்கிறது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது குறித்து பேசிய அவர், யாரும் எங்கிருந்தும் போட்டியிடலாம். ஆனால் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்று மக்களுக்கு ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
S Yechury on Rahul Gandhi contesting from Wayanad: Coming here&fighting against LDF, what message this conveys, that Congress has to decide. Any party can decide which candidate will contest from which seat but what's the message they want to convey,they'll have to explain to ppl https://t.co/Y0szfX0Gwy
— ANI (@ANI) March 31, 2019
வயநாட்டில் இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்ன சொல்ல வருகிறது என்பது புரியவில்லை. மதசார்பற்ற ஜனநாயம் நிலைக்குமா? நிலைக்காதா? என்பதை தீர்மானிக்க போகும் தேர்தல் இது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.