நாட்டை பாதுகாக்க எதையும் தியாகம் செய்ய தயார் -சோனியா காந்தி

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க எதையும் தியாகம் செய்ய தயார் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : May 27, 2019, 01:21 PM IST
நாட்டை பாதுகாக்க எதையும் தியாகம் செய்ய தயார் -சோனியா காந்தி title=

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க எதையும் தியாகம் செய்ய தயார் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து சோனியா காந்தி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னை தேர்ந்தெடுத்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதத்தை சோனியா காந்தி எழுதியுள்ளார். தனது கடிதத்தில் நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க எதையும் தியாகம் செய்ய தயார் என குறிப்பிட்டுள்ளார்.

நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இத்தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். 

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கவும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் நான் பெற்ற எதையும் தியாகம் செய்ய தயார். அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். இனிவரும் காலங்கள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனினும், உங்களது ஆதரவால் காங்கிரஸ் கட்சி அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. 

முந்தைய மக்களவைத் தேர்தலை போல இந்த தேர்தலிலும் நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். உங்கள் முன்னால் எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்களாகிய நீங்கள் தான் என் குடும்பம். உங்களிடம் இருந்துதான் சக்தியை பெறுகிறேன். நீங்கள் தான் எனது உண்மையான சொத்து. ரேபரேலி தொகுதி வாக்காளர்கள், காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாத சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News