மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவதில் தென் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும்: சசிதரூர்

தென் மாநிலங்களில் நிலவும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்தது. எனவே பிரதமர் மோடியை தென் மாநிலங்கள்தான் வீட்டுக்கு அனுப்பும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 7, 2019, 06:09 PM IST
மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவதில் தென் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும்: சசிதரூர்

புது தில்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் (Shashi tharoor), தற்போதைய சூழ்நிலையில் மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்துக்கு எதிரான நிலைபாடு அனைத்து தென் மாநிலங்களில் பரவலாக இருக்கிறது. பிரதமர் மோடியை தென் மாநிலங்கள்தான் வீட்டுக்கு அனுப்பும் எனக் கூறியுள்ளார்.

இன்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சசி தரூர் கூறியிருப்பதாவது:- மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் தென் மாநிலங்களில் பங்கு முக்கியமானதாக இருக்கும். தற்போது நிலவி சூழ்நிலையை பார்த்தால் மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவதில் தென் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும். எனக் கூறினார்.

தென் மாநிலங்களில் நிலவும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்தது. "கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.ஜே.பி ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கூட்டாட்சி தத்துவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் தென்மாநில அரசுகள் ஒன்றாக பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்தி திணிப்பு, மாட்டிறைச்சி தடை மற்றும் கலாச்சாரக் காரணிகள் போன்ற விவகாரம் மூலம் தென்மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் சரிவு ஏற்பட்டு உள்ளது. தெற்கு மாநிலங்களின் பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. 

கேரளாவில் எனக்கு இருக்கும் அனுபவம் மூலம் எனக்குத் தெரிகிறது. தெற்கில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது என்று தெளிவாக உள்ளது. தென் மாநிலமான கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. தகுதி வாய்ந்த பிரதமர் வேட்பாளர்கள் தென் மாநிலங்களில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன். 

மூன்றாவது முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளேன். தேர்தலுக்குப் பிறகு, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி அமையும். அது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும்.

மத்தியில் பெரும்பான்மை கிடைக்காது என்பதால், மாநில அரசின் ஆதரவை திரட்டும் வகையில் பிராந்தியக் கட்சிகளிடம் பா.ஜ.க பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. ஆனால் மிக அதிகமான பிராந்தியக் கட்சி, அவர்களுக்கு ஆதரவு கொடுக்க தயாராக இல்லை.

இவ்வாறு கூறினார்.

More Stories

Trending News