பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் - மத்திய அமைச்சர்!

பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் எனவும், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் கொண்டுவருவதற்கு மாநில அரசுகள் எதிர்க்கின்றனர் என பெட்ரோலியத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2021, 08:11 AM IST
பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் - மத்திய அமைச்சர்!  title=

மேற்கு வங்காள மாநிலம் பாவணிப்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொல்கத்தாவிற்கு சென்றார்.  அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, மேற்கு வங்காள அரசின் அதிக வரி விதிப்பு தான் இங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100 தாண்டிவிட்டது.

minister

பெட்ரோல் விலை குறைய விரும்புகிறீர்களா என்று கேட்டால் நான் ஆமாம் என்று தான் சொல்வேன்.  பிறகு ஏன் விலை குறையவில்லை? என்று கேட்டால் பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மாநிலங்கள் விரும்பாததுதான் அதற்கு காரணம் என்று சொல்வேன்.   பெட்ரோல் மீது லிட்டருக்கு 32 ரூபாய் மட்டுமே மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19 டாலராக இருந்த போதும் ரூபாய் 32 வசூலிதோம், பீப்பாய்க்கு 72 டாலர்களாக உயர்ந்த பிறகும் அதே ரூபாய் 32 மட்டுமே வசூலிக்கிறோம். இந்த 32 ரூபாய் தான் இலவச ரேஷன் பொருட்கள், இலவச வீடு, இலவச சமையல் கேஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை வழங்கி வருகிறோம்.  மேற்கு வங்காள மாநில அரசு கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் விலை ரூபாய் 3.51 உயர்த்தியது.  இல்லாவிட்டால் விலை லிட்டருக்கு ரூபாய் 100 க்கு கீழ் தான் இருக்கும்.  மேற்குவங்காளத்தில் பெட்ரோல் மீதான மொத்த வரி விதிப்பு 40 சதவீதமாக உள்ளது. 

petrol

பவானியில் இடைத்தேர்தல் முடிவு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது.  பிறகு ஏன் ஒட்டுமொத்த மந்திரி சபையும் இங்க பிரச்சாரம் செய்து வருகிறது? இந்த தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றி உறுதி. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை பற்றி தான் கவலையாக இருக்கிறது.  பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசில் நடந்த மாற்றம் காமெடியாக உள்ளது. அக்கட்சி இறுதிக்கட்ட வீழ்ச்சியில் இருப்பதை உணர்த்துகிறது. மேலும், எல்லா மாநிலங்களிலும் தோல்வி அடைந்து வருகிறது.  ஆப்கானிஸ்தானில் நடந்த நிகழ்வுகள் குடியுரிமை திருத்தச் சட்டம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகின்றன.  அகதிகளாக வந்தவர்களை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது, அதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இப்போது கேலி பொருளாக காட்சி அளிக்கிறார்கள் என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News