ஜேஎன்யூ விடுதி அறையில் இறந்து கிடந்த மாணவர்!!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் இறந்த நிலையில் மாணவர் ஒருவரின் உடல் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்த ஜே.ஆர் பிலேமன் என்ற மாணவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். 

Last Updated : Oct 26, 2016, 10:57 AM IST
ஜேஎன்யூ விடுதி அறையில் இறந்து கிடந்த மாணவர்!! title=

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் இறந்த நிலையில் மாணவர் ஒருவரின் உடல் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்த ஜே.ஆர் பிலேமன் என்ற மாணவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். 

ஜே.ஆர் பிலேமன் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அருகாமையில் உள்ள அறையில் இருந்த மாணவர்கள் பாதுகாவலருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் அறையை திறந்து பார்த்த போது, இறந்த நிலையில் பிலேமன் உடல் கிடந்தது. 

மேலும் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது காணவில்லை. காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயமான மாணவரை சிறப்புக்குழு அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.

Trending News