பஞ்சாபில் படிக்க J&K மாணவர்கள் 'no criminal record' சான்றிதழ் அவசியம்...

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர்கள் பஞ்சாபில் படிப்பதற்கு 'no criminal record' சான்றிதளை சமர்பிக்க வேண்டும் என பஞ்சாப் அதிரடி உத்தரவை விடுத்துள்ளது....! 

Written by - Devaki J | Last Updated : Oct 17, 2018, 11:42 AM IST
பஞ்சாபில் படிக்க J&K மாணவர்கள் 'no criminal record' சான்றிதழ் அவசியம்... title=

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர்கள் பஞ்சாபில் படிப்பதற்கு 'no criminal record' சான்றிதளை சமர்பிக்க வேண்டும் என பஞ்சாப் அதிரடி உத்தரவை விடுத்துள்ளது....! 

சண்டிகர்: பஞ்சாப் காவல்துறை சமீபத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து படிப்பதற்கு பஞ்சாப்-க்கு வருகை தரும் மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் 'no criminal record' சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வலியுறுத்தியுள்ளது. 

பஞ்சாபில் படிக்க ஆர்வமுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர்கள் அனைவரும் தனகளது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து 'no criminal record' என்ற சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த மாணவர் எந்த வொரு குற்றவியல் அல்லது அரசு சாரா நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதற்கு இது ஆதாரமாக விளங்குகிறது. இதையடுத்து, இந்த சான்றிதழை பஞ்சாப் காவல்துறையினரால் சரிபார்க்கப்பட்ட பின்னரே பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை பெற முடியும்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் படிக்கும் மாணவர்கள் சிலர் மீது குற்றவியல் சந்தேகம் ஏற்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாக ZEE NEWS செய்தியாளர் குல்வீர் திவான் தெரிவித்துள்ளார். 

தற்போது பஞ்சாபில் ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து சுமார் 9,000 மாணவர்கள் படிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கையானது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

Trending News